கொரேனா நெருக்கடியைத் தாண்டி டென்மார்க்கில் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

டென்மார்க்கில் உள்ள மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய்க் கெடுபிடிகளைத் தாண்டி இன்று பாடசலைக்குச் செல்லத்
தொடங்கியுள்ளனர்.

11 வயது வரையான மாணவர்கள் நேர்சரிகள் மற்றும் பள்ளிகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

தலைநகர் கோபன்ஹேகனில் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் பள்ளிக்குச் சென்று மாணவர்களை வரவேற்றுள்ளார்.

கொரோனா தொற்று நோயால் அனைத்து பள்ளிகளையும் கடந்த மார்ச் மாதம் 11 திகதி டென்மார்க் அரசாங்கம் மூடியிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்த நிலையில் பாடசலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பாவில் முதல் முதலில் பாடசாலைகளை மீண்டும் வழமைக்கு திரும்பும் நாடாக டென்மார்க் அமைக்கின்றது.

No comments