நிஜ தனிமைப்படுத்தல் மையங்களே தேவை?


யாழில் நேற்று செவ்வாய் கிழமை கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்ட 8 பேரும் இரண்டாவது தடவையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.

இதனை கருத்தில் வைத்து தனிமைப்படுத்தல் மையங்களில் நபர்களை தனித்தனியாக உரிய தனிநபர் பொழுது போக்கு வசதிகளுடன் தனிமைப்படுத்தலை எதிர்காலத்தில் மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பரா நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பலாலி இராணுவ முகாமில் தனித்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் எண்மர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

சுவிஸ் மத போதகர் நாடு திரும்பி ஒரு மாதமான நிலையிலும் அவருடன் தொடர்புடையவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் பரா.நந்தகுமார் முதல் நிலை தொற்றாளருடன் தொடர்பில் இருந்த இரண்டாம் நிலை தொற்றாளரும் அடங்குவர். நோய் தொற்றுடன் குணம் குறி காட்டாமல் இருந்திருக்க கூடிய முதலாம் நிலை தொற்றாளருடன் தொடர்பில் இருந்து இரண்டாம்; நிலை தொற்றாளர் தனிமைப்படுத்தும் மையங்களில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்கலாம்.ஆதலினால் மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் அவசியமானது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் தனக்கு அது தொடர்பற்ற விடயமெனவும் இராணுவமும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுமே பலாலி தனிமைப்படுத்தல் மையத்தை நிர்வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments