யாழ்.வருகிறார் கமல்:செட்டிக்குளத்தில் புதிய முகாம்?


வடக்கில் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களை திறந்து வைத்து பரிசோதனையில் ஈடுபட்ட அரசு தற்போது கொரோனா சிகிச்சை வைத்தியசாலையை வவுனியா செட்டிகுளத்தில் அமைக்க திட்டமிடப்படுகிறது.

தற்பொழுது வடக்கில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வெலிக்கந்தை மற்றும் கொழும்பு கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுவரும் நிலையில் சுகாதார அமைச்சு இந்தமுடிவினைஎடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண நாளை யாழிற்கு திடீர் விஜயம் செய்யவுள்ளதாக அரச ஆதருவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கமல் குணரத்ன நாளைய தினம் யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும்கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைகளின்தலைமையகத்தில் வடக்கின் ஐந்து மாவட்ட இராணுவ தளபதிகள், உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments