தெற்கு ஓய்ந்தபாடாகவில்லை!


வீதியில் நின்றவர்களை தோப்புக்கரணம் போடச்சொன்ன இலங்கை காவல்துறையினர் இருவர் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய பாணியில் கொழும்பில் சட்டம் ஒழுங்கை பேண முற்பட்டவர்களே தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று முன் தினம் (11) காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஜா-எலவை சேர்ந்த கொரோனா தொற்றாளிகள் அறுவருடன் நெருங்கி பழகிய மேலும் 32 பேர் இன்று (13) சற்றுமுன் கடற்படை காவலின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை குறித்த நபர்களுடன் பழகிய 132 பேர் புதிதாக கடற்படை காவலுக்கு கொண்டு வரப்பட்டு ஒலுவிலுக்கு அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments