சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?


வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 150ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கொரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமுக்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 216 பேர் பேருந்துகளின் மூலம் நேற்று கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த கொரோனோ தொற்றுக்குள்ளான கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேரும் பம்பைமடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments