பலாலி தனிமைப்படுத்தல்: கூட்டு தவறென்கிறார் சத்தியமூர்த்தி!


பலாலியில் தனிமைப்படுத்தியவர்கள் தொடர்பில் அம்முகாமிற்கு பொறுப்பான படை அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும்  தனிமைப்படுத்தப்பட்டவர்களது கூட்டுப்பொறுப்பே முக்கியமென தெரிவித்த அவர் ஆயினும் அப்பட்டமாக அது மீறப்பட்டிருப்பின் நாளை அல்லது மறுதினம் நடைபெறவுள்ள சுகாதார துறை கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படுமெனவும் கேள்வி ஒன்றிற்;கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.  

பலாலி இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் உரிய தனிமைப்படுத்தல் பொறிமுறைகள் முன்னெடுக்கப்படாமை அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்ப பட்டிருந்தது.

அப்போதே ஒரு தரப்பு மீது இவ்விடயத்தில் குற்றஞ்சாட்ட முடியாதென தெரிவித்த அவர் இது ஓர் கூட்டுப்பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

இதனிடையே பலாலி இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள எஞ்சிய நால்வருக்கும் மீண்டும் நாளை பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகயாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

No comments