வாழைச்சேனையில் திருட்டு அதிகரித்தது
ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதிகளில் வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தும் திருடர்கள், பெண்கள் அணியும் முழு நீள ஆடைகளை அணிந்து முகங்களை மறைத்துக் கொண்டு திருடும் காட்சிகள் சிசிடிவிகளில் பதிவாகியுள்ளன.
அண்மையில் ஓட்டமாவடியில், நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருடப்பட்டதுடன், அதே பகுதியில் வீடு ஒன்றின் கூரையைப் பிரித்து பணத்தை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Post a Comment