சமூர்த்தி உத்தியோகத்தரை காணோம்?


இலங்கை அரசு சமூர்த்தி வீடுகளிற்கு வந்து சேருமென பிரச்சாரம் செய்யப்பட பொன்னாலை சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணி தொடக்கம் காத்திருந்த மக்களை பாதுகாப்பு கருதி பொதுசுகாதார பரிசோதகர்கள் துரத்தியடித்துள்ளனர்.

சமுர்த்தி பயனாளிகள் காலை முதல் தவம் கிடந்தபோதும் அவர்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் மதியம் வரை வரவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

ஏனைய இடங்களில் வீடுகளுக்கு சென்று சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர் அலுவலகத்தி்ற்கு மக்களை அழைத்து கொடுப்பனவை வழங்கியிருக்கிறார்.

மக்கள் குழுமியிருப்பது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகத்தரிடம் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்டபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்.

அலுவலகத்திற்கு வந்து மக்களுக்கு விடயத்தைக் கூறி அவர்களை வீடுகளுக்கு அனுப்புங்கள். மக்கள் முக்கவசங்கள் கூட இல்லாமல் நிற்கிறார்கள் என கூறிபோது பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்

இது குறித்து அறிந்துகொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் அந்த இடத்திற்கு வருகைதந்து மக்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளார்.

No comments