இன்றும் ஓடி வந்தார் ஒருவர்?


நேற்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து எழுவர் அனுமதியின்றி யாழ்.வந்திருந்த நிலையில் இன்றைய தினமும் மாத்தளையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகர் ஒருவர் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் வருகை தந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் வாகனம் ஒன்றில் பயணித்து பண்ணாகம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகை தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரையும் தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் செய்யப்பட்டுள்ளது

இதனிடையே கொழும்பு போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் கட்டாயமாக 21நாட்கள் தனிமைப் படுத்தலிற்கு உட்படுத்தப்படவேண்டும்.அத்துடன் ஆனையிறவு சோதனைச்சாவடியில் அத்தகையவர்கள் மீத சோதனை  மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை அரியாலை தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சுவிஸ் போதகரின் ஆராதனையில், அரியாலை தேவாலயத்தில் கலந்து கொண்டவர்கள்,கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தியிருந்த 346 பேரினதும் பரிசோதனைகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

இன்று 36 பேருக்கு பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுள் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எஞ்சிய நால்வர் மற்றும் அவர்களுக்கு உணவு பரிமாறிய இராணுவத்தினர் நால்வர் அடங்கலாக கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்புத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments