கொழும்பிலிருந்து பட்டினியுடன் வந்தோர் மிருசுவில் படை முகாமில்?


கொழும்பிலிருந்து பட்டினியுடன் உயிர் தப்பி வந்தவர்களை யாழ்ப்பாணம்; மிருசுவில் விடத்தல்பளை இராணுவ தனிமைப்படுத்தல் மையத்தில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பில் கோரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றுவந்த பாரவூர்தி சாரதியையும் விடத்தல்பளை படைமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறை தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

குறித்த தனிமைப்படுத்தல் மையம் மிருசுவில் எண்மர் படுகொலை நடைபெற்ற  பகுதியினை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments