தேவநேசன் தொடர்ந்தும் கடமையில்?


யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தேவநேசனை மத்திய சுகாதார அமைச்சு இடமாற்றம் செய்ததாக வெளிவந்த செய்திகளினை சுகாதார துறை மறுதலித்துள்ளது.

நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இடமாற்றங்கள் மேற்கொள்ள முடியாது என்றபோதும் தற்போதைய கொரோனா நெருக்கடியின் பெயரில் மாவட்டத்தில் செயல்பட்ட ஓர் வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அவ்வாறு இடமாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கவில்லையெனவும் இடமாற்றம் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட தேவநேசன் இன்றும் கடமைக்கு சமூமளித்திருந்ததாகவும் அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே யாழில இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளிலும் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று 10 பேருக்கு கொரொனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள். இதில் ஒருவர் நேற்று மாலை மன்னாரிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர். இவர் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்தவர். மேலும் மன்னார் பகுதியைச் சேர்ந்த தொற்று உடையவர்களோடு தொடர்புடைய எட்டு பேருக்கான ஆய்வுகூடப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments