கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்காத வரைக்கும் கனடாவில் இயல்புநிலை திரும்பாது - ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் கொரோனா தொற்று நோயின் தாக்கம் எதிர்வரும் மாதங்களிலும் நீடிக்கலாம்  என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.
தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க 18 மாதங்கள் வரையில் தேவைப்படலாம் அதுவரை கனடாவில் இயல்பு நிலை திரும்பாது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வேகமாகப் பரவிவரும் கிருமித்தொற்றுக் காரணமாக 4,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments