முன்கூட்டியே எச்சரித்த முரளி வல்லிபுரநாதன்?


தனிமைப்படுத்தல் மையங்களை உரிய தராதரத்துடன் பேண கேட்டிருந்த சமுதாய மருத்துவர் வல்லிபுரநாதன் வெளியிலிருந்தான வருகை தொடர்பில் விழிப்புடனிருக்க நேற்றைய தினம் எச்சரித்திருந்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கின் பிற மாவட்டங்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் அபாய வலயங்களில் இருந்து எமது மாவட்டங்களுக்குள் பொறுப்பில்லாம் எவராவது நுழைந்தால் நிலமை மோசமாவதை எவராலும் தடுக்க முடியாது. எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அபாய வலயங்களில் இருந்து எவராவது வந்தால் அவர்கள் உறவினர்கள் நண்பாகள் என்று பாராமல் உண்மையை சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்தவேண்டும். ஒரு நபருடைய செயற்பாட்டினால் ஒரு சமூகம் பாதிக்கப்படும் நிலையே இன்றிருக்கின்றது. குறிப்பாக சுவிஸ் போதகரின் செயற்பாடு எமக்கு உதாரணமாக உள்ளது

யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடமாகாணம் தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. ஆனாலும் சுவிஸ் போத கரைபோல் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலும் நிலமை மோசமாகும். அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதனை மக்கள் சரியாக செய்யவேண்டுமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் எச்சரித்திருந்தார்.

ஊரடங்கு சட்டம் வடமாகாணத்தில் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலமை குறித்து ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டபோதே இந்த எச்சரிக்கையினை விடுத்திருந்தார்.

மேலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் திருவிழாவுக்கு செல்வதுபோல் வீதிகளில் திரிவதை பார்க்க முடிகின்றது. தேவையில்லாமல் எவரும் வெளியே நடமாடாதீர்கள். அலுவலகங்கள் வேலை தளங்களில் கட்டாயம் முக கவசம் அணியுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். அதுவே பாதுகாப்பாக நாங்கள் இருப்பதற்கு வழியாகும்.

;ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது நோயாளா் எண்ணிக்கை அதிகரிக்கும். இதற்கு உலகில் பல நாடுகள் உதாரணமாக உள்ளன. ;அங்கெல்லாம் தளர்வின் பின்னர் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தே இருக்கின்றது. அதே போல் இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டமையால் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.ஆனால் எங்களுடைய நாட்டில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அது வெற்றியளித்தால் எங்களுடைய நாடு மற்ற நாடுகள் சந்தித்த அபாயத்தை சந்திக்காது தப்பிக்கலாம் என்றிருந்தார்.

அவரது எச்சரிக்கை வெளியான பின்னரே நேற்றிரவு எழுவர் கொழும்பிலிருந்து வருகை தந்த சம்பவம் நடந்திருந்தது.

No comments