கட்டுவப்பிட்டிய ஆலயத்தில் நினைவேந்தல்


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று (21) காலை 8.45 மணிக்கு நீர்கொழும்பு - கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கொல்லப்பபட்டவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மணியோசை எழுப்பி விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

உயிர்த ஞாயிறு பயங்கரவாதத்தின் போது இந்த செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டதுடன் 139 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments