இரத்தம் குடித்த பயங்கரவாதம் இன்று நடந்தது

இலங்கையில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.

நாட்டு மக்களை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதல்களினால் ஏற்பட்ட ரணங்கள் இன்றும் ஆறாத வடுவாகவே ஆழ்மனங்களில் பதிந்துள்ளன.

இந்த தாக்குதல்களில் அவயங்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் துன்பத்தில் பங்கெடுத்து நாட்டு மக்களும் அந்த ரணங்களை நினைந்து ஓராண்டு நினைவை ஆத்மார்த்தமாக நினைவுகூரும் வேளை இதுவாகும்.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதியான இதேநாளில் உயிர்த்த ஞாயிறு புனித நாளில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்றதும், இலங்கை மக்களை உலுக்கிய கோரச் சம்பவமாகவும் மாநகர் கொழும்பு மற்றும் ஏனைய சில நகரங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கை வரலாற்றில் பதிவாகின.

இந்த பயங்கரவாதத்தில் 270கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன், 600கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தமை குறிபிடத்தக்கது.

No comments