வெளிநாடுகளில் 59 ஆயிரம் இலங்கையர்களுக்கு சிக்கல்

உலகின் பல நாடுகளிலும் 59,000க்கும் அதிகமான இலங்கையர்கள் பாதிக்கப்பட்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 21,575 பேர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ளனரென்றும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண உதவிகள் வேலைத்திட்டத்தின் கீழ், இவர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவர்கள் நாடு திரும்ப முடியாமலும் வேலையின்றியும் திணறுகின்றனர்.

No comments