கட்டுப்பாட்டை மீறிய வர்த்தகம்; 12 பேர் சிக்கினர்

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் பரிசோதனை சுற்றிவளைப்பில் 12 வர்த்தகர்கள் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

ஒட்டமாவடி நகரம், வாழைச்சேனை, மிராவோடை, கறுவாக்கேணி, மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அரிசி கட்டுப்பாட்டு விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்த  பன்னிரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments