சீயோன் ஆலயம் முன்னால் நினைவஞ்சலி!

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதலில் படுகாெலை செய்யப்பட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (21) காலை 9 மணிக்கு மட்டக்களப்பு – சீயோன் தேவாலயம் முன்னால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் சீயாேன் தேவாலய முன்பகுதியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


No comments