யுத்த கால ஆட்டம்:தகவல்களை மறைக்க தொடங்கிய கோத்தா?


இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசு தகவல்களை மறைக்க அல்லது தாமதித்து வெளியிடும் உத்தியை கைக்கொள்ள தொடங்கியுள்ளது.

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த சிலர், பரிசோதனைக்கான கண்டக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து காத்தான்குடி சிகிச்சை மய்யத்துக்கு மூன்று கட்டங்களாக அனுப்பப்பட்டிருந்தனர். முதலில் 24 பேரும், பின்னர் 6 பேரும், அதன் பின்னர் 3 பேருமாக மொத்தம் 33 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டபோது, அவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அங்கிருந்து நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும் இன்று மாலை வரை அத்தகவலை  இலங்கை அரசின் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கவில்லை.

No comments