சிவராமுக்கு ஊடக அமையத்தில் அஞ்சலி!

 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (29) மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநககர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் நிலாந்தன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.No comments