குழத்தைக்கு எமனாகிய வாளி!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவு, உன்னிச்சைப் பகுதியை சேர்ந்த 2 வயதுடைய இந்திரகுமார் றுஸ்மிதன் என்ற ஆண் குழந்தை, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தையும் அதே வயதுடைய அயல் வீட்டுக் குழந்தையும் வீட்டு முற்றத்தில் விளையாடிய போது நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த வாளியில் குறித்த குழந்தை விழுந்துள்ளது.

குழந்தையின் அழு குரலைக் கேட்ட தாய் ஓடிவந்து பார்த்தபோது குழந்தை நீருக்குள் கிடப்பதைக் கண்டுள்ளர். உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி சந்திரவதனா நிஸ்ரமானந்தராசா, சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.

No comments