அமெரிக்காவுக்கு ஆமா போடும் தென்கொரியா! வடகொரியாவை கண்காணிக்க 5 விமானங்களை அனுப்பியது!

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்  வொன்சனுக்கு அருகிலுள்ள அவரது பரிவாரங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொகுசு படகுகளின் சமீபத்திய நகர்வுகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளது  அவர் கடலோர சொகுசு மாளிகைகளில்  இருந்திருப்பதற்கான கூடுதல் அறிகுறிகளைத் தருகின்றன என்று கண்காணிக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கிம் ஜாங் உன் மறைந்த தாத்தா மற்றும் வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 15 கொண்டாட்டங்களில் கலந்துகொல்லாததினால் அவரின் உடல்நிலை மற்றும் இருப்பிடம் தொடர்பில் சந்தேகங்கள் பரவ ஆரம்பித்தள்ளது.

 இந்நிலையில் செவ்வாயன்று, வட கொரியா-கண்காணிப்பு வலைத்தளமான என்.கே.பிரோ வணிக ரீதியான செயற்கைக்கோள் படங்கள் கிம் அடிக்கடி பயன்படுத்தும் படகுகள் அவர் அல்லது அவரது பரிவாரங்கள் வொன்சன் பகுதியில் இருக்கலாம் என்று பரிந்துரைக்கும் வடிவங்களில் நகர்வுகளை காட்டியதாகக் காட்டியது. இது கடந்த வாரம் யு.எஸ். அடிப்படையிலான வட கொரியாவின் கண்காணிப்புத் திட்டமான 38 North அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, கிம்ஸின் தனிப்பட்ட ரயில் என்று நம்பப்படுவதை வொன்சானில் உள்ள வில்லாவில் பயன்படுத்த ஒதுக்கப்பட்ட நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் தெரிவித்தன. தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் கிம் அங்கு தங்கியிருப்பது நம்பத்தகுந்ததாக இருக்கிறது.

கொரோனா வைரஸில் இருந்து தவிர்ப்பதற்காகவும், அவருக்கு ஒருவித கடுமையான நோய் இருப்பதாக ஊடக அறிக்கைகள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் 5 அதி நவீன ஒட்டுக்கேட்கும் கண்காணிப்பு உளவு விமானங்களை அமெரிக்கா வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளது.  ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக கிம் ஜோங் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வான்சோன் பகுதியில் இந்த விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளது. டிரோன் வகை விமானமான இது ரேடாரில் சிக்காதவகையில் இதுதொழில்நுட்பத்தை கொண்டுள்ளத்க கூறப்படுகிறது.

No comments