போதையேறி சுட்டவர் ரி-56 உடன் கைது

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற குழப்பத்தின் போது துப்பாக்கி சூடு மேற்கொண்ட சந்தேகநபர் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு - செந்நெல் கிராமத்தில் நேற்று (20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இன்று (21) 26 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து, மறைத்து வைத்திருந்த ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் பொலிஸா் மீட்டுள்ளனர்.

No comments