முடங்கியுள்ளவர்களை அனுப்பிவைக்க முயற்சி!


ஊரடங்கு சட்ட நடைமுறையால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். அவர்கள் தமது சொந்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கு விருப்பம் வெளியிட்டிருக்கின்றனர்.ஆனாலும் நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக அவர்களை அனுப்ப முடியாத நிலைமை இருந்தது. ஆனால் தற்போத சில மாவட்டங்கள் தவிர ஏனைய பல இடங்களில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. ஆகையினால் ஊரடங்கு தளர்த்தப்படாத மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விரைவில் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலகம் மேற்கொண்டு வருவதாகவும்; கட்டம் கட்டமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும்  மாவட்ட செயலர்; தெரிவித்துள்ளார்.

இதனிடையே நிவாரண விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதான குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக  தெரிவித்த அவர் அவ்வாறு குற்றச்சாட்டக்கள் ஏதும் இருப்பின் தன் மீதும் விசாரணைமேற்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கொடையாளர்களினால் மாவட்டச் செயலகத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன.ஆயினும் அந்த உதவிப் பொருட்களை அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமர்று மாவட்ட செயலர் பணித்ததாக 
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே குற்றச்சாட்டக்கள் ஏதும் இருப்பின் தன் மீதும் விசாரணைமேற்கொள்ள முடியுமென  யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

No comments