சேனாதி தலைமையில் தந்தை செல்வா நினைவேந்தல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 26ம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் ஊரடங்கு சட்டம் காரனமாக இன்றையதினம் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவு நிகழ்வினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பத்தில் அனுமதித்திருக்கவில்லை.
பின்னர் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது.
இதற்கமைய ஒவ்வொருவராக சென்று தந்தை செல்வா நினைவு தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Post a Comment