வடமராட்சி எள்ளங்குளம் முகாமில் பரபரப்பு?
வடமராட்சி எள்ளங்குளம் படை முகாமிலிருந்து அவசர அவசரமாக அம்புலன்ஸ்கள் மூலம் அகற்றப்பட்ட படையினர் தொடர்பில் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இரண்டு தடவைகளாக இராணுவ அம்புலன்ஸ்கள் மூலம் முகாமிலிருந்து படையினர் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் தொடர்ந்து மருந்து விசிறல் பணிகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அயலில் குடியிருக்கும் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த எள்ளங்குளம் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது பாரிய படைத்தளமாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மையங்களிற்கு பயன்படுத்த அரசு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுவருகின்றது.
இவர்களை தென்பகுதியில் தனிமைப்படுத்தி வைத்திருந்தால் அந்த மையங்களிலிருந்து அவர்களில் பலர் மிக இலகுவாக தப்பி ஓடிவிடுவார்கள் என அரச உயர்மட்டத்திலிருந்து விளக்கமளிக்கப்படுகின்றது.
50 பாடசாலைகளில் கொரோணா தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் நாடுமுழுவதிலும் விடுப்பில் இருந்த மும்படைகளைச்சேர்ந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி வடக்கிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இவர்கள் வடக்கில் அமைக்கப்படவிருக்கும் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்படவுள்ளனர்.
Post a Comment