முப்படைகளும் முகாம்களிற்கு அழைப்பு:அச்சத்தில் குடும்பங்கள்?


இலங்கை முப்படைகளையும் முகாம்களினுள் முடக்க அரசு முற்பட்டுள்ள நிலையில் ஒருபுறம் அச்சமும் மறுபுறம் குடும்பங்களிடையே அரசிற்கெதிரான சீற்றமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடற்படை வீரர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அவர்களே முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அத்துடன், தற்போதைய நிலைமையை முகாமை செய்ய முடியுமெனவும் கடற்படை தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது. 

இதன் காரணமாகவே விடுமுறையில் சென்றவர்களை முகாம்களுக்கு அழைக்கும் பணியை முன்னெடுத்துள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் லுத்தினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றினால் 180க்கு மேற்பட்ட கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து மாவட்டங்களிலும் படைமுகாம்களில் தனிமைப்படுத்தலை முன்னெடுக்க ஏதுவாக முப்படைகளையும் வீடுகளிலிருந்து முகாம் திரும்ப அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments