யாழில் கொரோனா சந்தேக நபர் பலி
கொரோனோ நோய் தொற்று சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு யாழ்பாணம் - கொடிகாமம், விடத்தற்பளை இராணுவ முகாமின் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் நேற்று (23) இரவு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த எம்.அ.நசார் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ம் திகதி விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி நேற்று பகல் நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியிலிருந்து சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே அவர் இரவு திடீரென உயிரிழந்தார்.
எனினும் மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Post a Comment