அம்புலன்ஸ் மீது சராமரி தாக்குதல்

மட்டக்கப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று (17) இரவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு திரும்பிய அம்புயுலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது அம்பியுலன்ஸ் வண்டியின் ஒரு பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

No comments