பிரியா நடேஸ் குடும்பத்துக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய இலங்கைத் தமிழ் குடும்பத்தினை உடனடியாக நாடு கடத்த வேண்டாம் என்று அவுஸ்திரேலியாவின் சமஷ்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைத் தம்பதியரின் இரண்டு வயது மகளான தருணிகாவின் மனு உரிய முறை ஆராயப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் உடனடியாக நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரின் செயற்பாட்டால் மனுதாரரின் சிறுப்புரிமை மீறப்பட்டு உள்ளதாகவும், உரிய நடைமுறைகளுக்கு அமைய இவர்களின் குடிவரவு குறித்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அவுஸ்திரேலிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments