பயங்கரவாத நினைவேந்தலை வீடுகளில் அனுஷ்டியுங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேவாலய நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வாசஸ்தலத்தில் இன்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1ம் ஆண்டு நினைவேந்தலை ஏப்ரல் 21ம் திகதி காலை 8.45 மணிக்கு வீடுகளில் இருந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டிக்குமாறு பேராயர் கோரிக்கை விடுத்தார்.

No comments