நிதி நிறுவனத்தை விரட்ட கொரோனா கதை விட்ட பெண்

நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து தப்புவதற்கு கொரோனா அறிகுறிகளை கூறி அச்சப்பட வைத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

மாதாந்த கட்டுப்பணத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் ஒன்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துமாறு கோரி நிதி நிறுவன ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது தனது கணவருக்கு அதிக இருமலும் காய்ச்சலும் காணப்படுவதால் சிகிச்சைக்குச் சென்றுள்ளார் என்று மனைவி தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த ஊழியர்கள் கொரோனா அச்சத்தால் திரும்பிச் சென்றனர். ஆயினும் பின்னர் இந்தத் தகவல் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளை சென்றதடைந்தது.

விசாரணைக்கு சென்ற சுகாதார அதிகாரிகளிடம் குறித்த பெண்ண நிதி வசூலிக்க வந்த நிறுவனத்திடமிருந்து தப்புவதற்கே இவ்வாறு பொய் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணிற்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர்.

No comments