தனிமைப்படுத்தலிற்கு யாழ்.வந்த கொழும்புவாசி மரணம்?


கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதனிடையே தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ள போதும் மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆயினும் மாரடைப்பினால் ஏற்பட்ட மரணமென சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தினுள் புதிதாக கொரோனோ தொற்றிற்குள்ளான எவரும் கண்டறியப்படவில்லையெனவும் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.  

No comments