அட்சய திருதிக்கு தானமே புண்ணியம்:முரளி


அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்குவதனை விடுத்து தான தர்மங்களில் ஈடுபட அழைப்புவிடுத்துள்ளார் சமுதாய மருத்துவ நிபுணர்
முரளி வல்லிபுரநாதன்.

தங்கம் வாங்குவதற்கு இணையான அல்லது அதற்கு மேலான பலனை அட்சய திருதியை தினத்தில் தானம் வழங்குவதும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழங்கும் என்று இந்து சமய மற்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன.இந்நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் தங்கத்தை சேகரிக்காமல் கொரோனாவுடன் இணைந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கே போராடும் மக்களுக்கு உதவி புண்ணியத்தை சேகரிக்குமாறு அனைத்து சைவ மற்றும் இந்து சமய நண்பர்களை விநயமாக கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கொரோனா பரவும் அபாயம் நாடெங்கும் காணப்படும் நிலையில் பிறந்தநாள் மற்றும் ஏனைய வைபவ கொண்டாட்டங்களை எளிமையாக குடும்ப உறுப்பினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டால் நோய் பரவும் அபாயத்தை தவிர்த்து கொள்ளமுடியும்.

எங்களையும் எமது சமூகத்தையும் பாதுகாக்க முடியும். கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றியெனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments