ஆட்டிப்படைக்கின்றது இலங்கையினையும் கொரோனா?

இலங்கையின் தெற்கில் கொரோனா உச்சம் பெற்றுள்ள நிலையில் குருநாகல் மீகலேவயில் 16 குடும்பங்களுக்குட்பட்ட 34 பேர் இன்று தனிமைபடுத்தலிற்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து தனிமைப்படுத்தலிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒருவர் நேற்று இரவு (23) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் கெற்பேலி இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர், நேற்று (23) இரவு உயிரிழந்துள்ளார். எம்.அ.நசார் (62) என்பவரே உயிரிழந்தார். கடந்த 22ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

நேற்று நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, கொரோனா சிகிச்சை விடுதியிலிருந்து சாதாரண விடுதிக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால், நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் தாழ் குருதியழுத்தத்தால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. அவரது குடும்பத்தினர் அனைவரும் கொடிகாமம் மற்றும் பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவரது உடல் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments