மனைவியை கொன்ற கணவனும் மரணம்

புத்தளம் - கற்பிட்டி, தொரடிய பகுதியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், பின்னர் அதே கத்தியால் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 36, 42 வயதுடைய தம்பதியினரே பலியாகியுள்ளனர்.

குறித்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், குறித்த இருவருக்கிடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே, கொலைக்கு காரணமெனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது - எனவும் கூறினர்.

No comments