கொரோனாவுக்காக கும்பிட போனார் கோத்தா?


நேற்று (25) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிரிவெஹெற விகாரையை தரிசித்து தற்போது நம்மை ஆட்கொண்டிருக்கும் இந்த கொடிய நோயிலிருந்து நம் நாட்டையும் முழு உலகத்தையும் விடுவிக்குமாறு பிரார்த்தித்தாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடகிழக்கில் உள்ள ஆலயங்களில் கடந்த வெள்ளி வழிபட சென்ற பக்தர்கள் பலரும் தனிமைப்படுத்தலிற்கு இலங்கை காவல்துறையால் உள்ளாகியுள்ளனர்.

சமூக இடைவெளி பேணாமையே இதற்கு காரணமென தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வவுனியா, மகாகச்சகொடி பகுதிக்கு விடுமுறையில் வந்த கடற்படை சிப்பாய்க்;கு கொரனா உறுதியெனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் சில ஊடகங்கள் கடற்படை வீரருக்கு கொரனா இல்லை என வெளியிட்டுள்ள செய்தியினையடுத்து சற்று முன்னர் உயர் அதிகாரிகள் சிலருடன் தொடர்பு கொண்டு வினாவிய சமயத்தில் அவர்கள் கடற்படை வீரருக்கு கொரனா தான்  என்பதினை உறுதிப்படுத்தியதுடன்சில ஊடகங்கள் அவசரத்தில் வெளியிட்ட செய்தியினால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தனர்.இதனிடையே சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு கொரோனா உள்ளதா என்ற மருத்துவ பரிசோதனை இன்று மதியம் வெளியாகும் எனவும் தெரிவித்தனர்

No comments