ஆமிக்கு அடங்க சுகாதார துறை மறுப்பு?


கொரோனா கட்டுப்பாடு அதிகாரம் இராணுவத்திற்கா அல்லது சுகாதாரப்பிரிவினருக்கா என்பதில் தொடரும் நிழல் யுத்தம் உச்சமடைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மத்திய கொழும்பு பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 12 பேர் கடமையிலிருந்து விலகி, 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

தம்மை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு கோரியபோதும் அதனை அதிகாரிகள் நிராகரித்தமையால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டமையால்,  இவர்கள் தங்களை பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு  உட்படுத்துமாறு கோரியுள்ளனர். 

ஏற்கனவே இராணுவத்தளபதி சவேந்திரசில்வாவின் பணிப்புரைகளை சுகாதார துறை ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதுடன் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments