லஞ்சம் பெற்ற அதிகாரி:அம்பலப்படுத்துகிறார் சச்சி?


சர்ச்சைக்குரிய அரியாலை தேவாலயத்தை வயல்காணியினுள் அமைக்க அனுமதித்த வடமாகாணசபையின் மூத்த அதிகாரி தொடர்பில் அம்பலப்படுத்த போவதாக மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரி முன்னர் விவசாய திணைக்களத்தில் பதவியில் இருந்த போதே வயல்காணியினுள் தேவாலயத்தை அமைக்க லஞ்சம் பெற்று அனுமதித்ததாகவும் தற்போது அவர் வடமாகாணசபையின் அதிகார மட்டத்தில் இருந்து வருகின்ற போதும் விரைவில் அதனை அம்பலப்படுத்த போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த அதிகாரி தொடர்பில் சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரியிருப்பதாகவும் அவை கிடைத்ததும் முழுமையான தகவல் வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே அருகிலுள்ள வயற்காணிகளிற்கான நீர் போக்குவரத்தை தடை செய்தே குறித்த சுவிஸ் போதகரது தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments