இராணுவத்தை வைத்து கொரோனாவை வெல்லமுடியாது?


இலங்கை அரசாங்க மருத்துவர் சங்கம் (GMOA) எனப்படும் கொரோனோவின் தாக்கம் குறித்து பரிசோதனைகளை (Testing) அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்தை வற்புறுத்தி இருக்கிறது . இன்றைய நிலையில் நாள் தோறும் 250 பேர் மட்டும் பரிசோதனை செய்யப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது . தற்போதைய நிலையில் 750-1000 பரிசோதனைகள் செய்ய கூடிய வாய்ப்பு இருந்தும் 250 பரிசோதனைகள் மட்டும் செய்யப்படுவது பற்றி மருத்துவர் சங்கம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுப்படுத்த பரவலான முறையில் பரிசோதனைகளை அதிகரிப்பது தான் இன்றைய நிலையில் அவசியமானது. இலங்கை போன்ற வறுமையான நாடு ஒன்றில் அப்பாவி பொதுமக்களை இராணுவ பாணியில் நீண்ட காலத்திற்கு பூட்டி வைக்க முடியாது . இன்றைக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் மகத்தான பணிகளினால் மட்டுமே பல குடும்பங்ககளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன .

இலங்கையின் சனத்தொகையில் 4.1 % ஆன பொதுமக்கள் வறுமை கோட்டுக்குள் வாழுகிறார்கள். இலங்கையில் தொழில் செய்யும் 58 % (ஏறத்தாழ 47 லட்சம்) பொதுமக்கள் நாளாந்த வருமானம் உழைக்கும் வகுப்பையும் சுய தொழிலையும் நம்பி இருக்கிறார்கள். இலங்கையில் தொழில் செய்யும் 81 லட்சம் பொதுமக்களில் 0.8 % ஆன பொதுமக்களின் நாளாந்த வருமானம் $ 1.9 வருமானத்திற்கும் குறைவானது. இந்த குடும்பங்கள் எல்லாம் இப்போது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள் . அரசாங்கத்தால் இதுவரை இந்த பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற காத்திரமான நல திட்டத்தை முன் வைக்க முடியவில்லை. மறுபுறம் வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி நிறுவனங்கள் நலன்நோன்பு திட்டங்களை செய்ய தேவையான பணத்தை பெற்று கொள்ளுவதற்கு ஆளுநர்கள் ஊடக அரசாங்கம் தடை ஏற்படுத்தி வருகிறது. பேரிடர் காலத்தில் கூட கீழ்த்தரமான இனவாத அரசியல் செய்கிறார்கள்

இந்த சூழலில் மிக விரைவாக கொரோனோவின் தாக்கத்தில் கடந்து போக பரவலான பரிசோதனைகள் என்கிற இலங்கை அரசாங்க மருத்துவர் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது. இலங்கை முழுவதிலுமிருந்து சந்தேகிக்கப்படும் அனைத்து பொதுமக்களையும் நாம் சோதிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாள் தோறும் 5000/10000 பொதுமக்களை சோதனை செய்ய தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு பரிசோதனை கருவிகளும் (Test Kid) இலங்கை பெறுமதி 16,000 ரூபவாக இருக்கிறது. ஆகவே பரிசோதனைக்கு நாள் தோறும் 160 மில்லியன் செலவாகும். குறைந்த பட்சம் ஒரு மாதம் 4.8 பில்லியன் ரூபா செலவாகும். ஆனால் இதில் சமரசம் செய்ய முடியாது. காத்திருக்கும் ஒவ்வொரு நாட்களும் மருத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு ஆபத்தானது.

பரிசோதனைகளில் நோயாளிகளாக கண்டறியப்பட்டால் , அவர்களின் தொடர்புகள் கண்டறியப்பட வேண்டும் . அதே போல அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். பாதிக்கப்படாதவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட வேண்டும். அடையாளம் காணப்படுகின்றவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும் . இலங்கையில் 570 இருப்பதாக சொல்லுகிறார்கள் . 2500 பேரை மட்டுமே கையாள கூடிய வசதிகள் இருப்பதாக மருத்துவர் சங்கம் சொல்லுகிறது .ஆகவே அரசாங்கம் இனியும் தாமதிக்காது விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இதுவாக தான் இருக்க முடியும். சரியான முறையில் செயல்பட்டால் ஒரு மாதத்திற்குள் கொரோனோவின் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியும்.

No comments