நிவாரண அரசியல் வேண்டாம்: போர்க்கொடி!


யாழில் பசித்திருந்த மக்களிடையே அரசியல் செய்யும் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிற்கு உதவி பொருட்களை வழங்கப்போவதில்லையென சில பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்குப்பட்ட பிரிவுகளில் கஸ்;ரப்படும் மக்களின் விபரங்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக மட்டுமே திரட்டப்பட்டு பொருட்கள் வழங்கப்படுமெனவும் அத்தரப்புக்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அரசியல் வாதிகள் கையில் உதவி பொருட்களை தரமாட்டோம்.ஏனெனில் நாங்கள் வழங்கிய நபர்களை படம் எடுத்து போடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.அரசியல்வாதிகளுக்கும் சிவில் செயற்பாட்டாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தொடர்பிலேயே இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

No comments