பயம் வேண்டாம்:146 இல்7யாழில் இதுவரையில் 146 பேருக்கு கெரோனா தொற்றுத்தொடர்பில் பரிசோதணை மேற்கொள்ளப்படடுள்ளது என்று யாழ்.போதானா வைத்திய சாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இதில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போனா வைத்திய சாலையில் 67 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைத்திய சாலைக்கு வெளியில் இதுவரையில் 79 பேருக்கு பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று உள்ளவர்கள் என அடையாளப்படுத்தவர்கள் கெர்ழும்பிற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்

No comments