பிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி!

பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை
மாலை உயிரிழந்துள்ளார்.

அந்தோனியார் கோயிலடி, சுன்னாகம் மத்தியைச் சேர்ந்த ஜோர்ஜ் அன்றூ (வயது 56) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இவர் பிரான்சில் சுன்னாகம் மக்கள் மன்ற செயற்குழு உறுப்பினர் எனவும் அறிய முடிகிறது.

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் எமது செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தனர்.

No comments