கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தத் தொடங்கியது பிரித்தானியா


மனிதர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி போட்டுச் சோதனைகளை ஆரம்பித்துவிட்டது என பிரித்தானியா அரசின் தடுப்பு ஊசி கண்டுபிடிப்பு
குழுவின் உறுப்பினர் ஜான்பெல் கூறியுள்ளார்.


இச்சோதனைகளை ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆரம்பித்துவிட்டது. தடுப்பு ஊசி கண்டுபிடிப்பது என்பது முக்கியம் அல்ல. அது எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய கவலை எனவும் குறித்த பரிசோதனை ஆகஸ்ட் மாத மத்தியில் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments