ஆராதனை சென்று ஒழிந்தோரே பதிவு செய்க

யாழ்ப்பாணம் - அரியாலை பிலதெல்பியா தேவாலயஆராதனை சென்று ஒழிந்தோரே பதிவு செய்க ஆராதனைக்கு சென்று இதுவரை தனிமைப்படுத்தலுக்குச் உட்படாமல் மறைந்திருப்பவர்கள் தங்கள் உடனடியாக பதிவு செய்யுமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கோரியுள்ளார்.

பண்ணைப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சுவிஸ் போதகர் ஒருவரால் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிப் பழகிய 325 பேர் வரையிலானவர்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் தற்போது குறித்த தேவாலயத்திற்குச் சென்று இன்றுவரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் சிலர் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு, இருப்பவர்கள் பற்றிய தகவல்களை எமக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு அவர்கள் தாமாக முன்வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம்.

அந்த அடிப்படையில் தாவடியில் உள்ள ஒரு பகுதியினருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரியாலைப் பகுதியில் உள்ளவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன - என குறிப்பிட்டார்.

No comments