கொரோனா வைரஸ் சோதனைகள்: யேர்மனியிடம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

யேர்மனி அடுத்தவாரம் புதிதாக கொரோனா தொற்று நோய் உள்ளவர்களைக் கண்டறிய புதிய சோதனைகளை தொடங்குவதற்கு
தயாராகிவருகின்றது.

சோதனைகளின் மூலம் புதிய தொற்று நோய் உள்ளவர்களை கண்டறிவதல் அந்நாட்டில்  கொரோனாவின் விழுக்காட்டின் பாதிப்பை அறிதல், அத்துடன் சோதனைகளில் இரத்தத்தில் கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தியை தேடுதல் போன்ற முக்கிய நோக்கங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

யேர்மனயில் நான்கு பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயால் மிக மோசமாக பாதிகப்படைந்துள்ளன. இப்பகுதியில் கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு கொரேனா எதிர்ப்பு சக்திகொண்ட இரத்த தானம் செய்வதும் நோக்கமாக அமைகின்றது.

கொரோனா சோதனை என்று வரும்போது, ​பிரித்தானியா உட்பட பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜெர்மனி கணிசமாக முன்னணியில் உள்ளது.

பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற பிற முக்கிய ஐரோப்பிய நாடுகளை விட, ஒரு நபர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த யேர்மனியர்கள் மிக அதிகமான நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் யேர்மனியில் 132 ஆய்வகங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 116,655 கொரோனா நோயறிதல் பரிதோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 1.3 மில்லியன் சோதனைகளுக்கு அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 10 நிலவரப்படி பிரித்தானியாவில் மொத்தமாக 16,836 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை பரிசோதிப்பதற்கான அதன் திறனைப் பொறுத்தவரை யேர்மனி முன்னேறியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விட்டி ஏப்ரல் 7 அன்று தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

நோய்வாய்பட்டவர்களை சோதிப்பதை விட நோய் இல்லாதவர்கள் மற்றும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களை மீது சோதனைகளை அதிகரித்தால் இறப்பு விழுக்காடு குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.

யேர்மனியில் கொரோனா தொற்று நோய் ஆரம்ப கட்டத்திலிருந்தே சோதனைகள் பரவலாக நடத்தப்பட்டன. பெரும்பாலான சோனைகள் எதிர்மறை முடிவுகளையே வழங்கின. அத்துடன் கொரோனா வைரசால் பாதிப்படைந்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே தனிமைப்படுத்தப்பட மக்களுக்கு யேர்மனி அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்டு சோதனைகள் நடத்பபட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். யேர்மனி அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகளால் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்காலாம் என நம்பப்படுகின்றது. இதனால் தொற்று நோயின் விழுக்காட்டினைக் அவர்கள் குறைத்துள்ளனர். ஏனைய நாடுகளைப் போல் அல்லாம் இறப்பு மற்றும் தொற்று நோய் பரவல் உயரவில்லை என கூறப்பட்டுள்ளது.

No comments