பிராஸ்சின் முடக்க நிலை மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

கொரோனா வைரசால் பரவலைத் தடுப்பதற்கு நாடு மேலும் ஒரு மாதம் முடக்கப்படும் என பிரான்சின் அதிபர் இமானுவல் மக்ரோன்
அறிவித்துள்ளார்.

நேற்று திங்கள்கிழமை மாலை நாட்டு மக்களுக்க வழங்கிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்:-

நாட்டின் மக்கள் முடக்க நிலை சட்டங்களை மதித்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போர் வெல்லப்படும் முடக்க நிலைச் சட்டங்களை மக்கள் பொறுப்புடன் மதிக்கிறார்கள்.

பிரான்ஸ் நாடு மே11 அன்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடக்கும்.

நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் நாங்கள் தொடர்ந்தும் எங்கள் முயற்சிகளை தொடரவேண்டும். சட்டங்கள் மதிக்கப்படுவதால் அதிக உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அதனால்தான் மே 11 திங்கள் வரை கடுமையான முடக்க நிலை தொடரும் என நான் அறிவிக்கிறேன்.

சட்டங்களை மதித்து நடக்கும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எனக்கு புதிய நம்பிக்கை உள்ளது, ஆனால் வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகள எதுவும் வெல்லப்படவில்லை. தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இல்லை என அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

No comments