மயிலிட்டியைச் சேர்ந்தவர் லண்டனில் மரணம்!

கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த மூன்று
பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் வசித்துவந்த நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஒரு கிழமைக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தவர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் நுரையீரல் செலிழந்து வருவதாகவும் சனிக்கிழமை இரவு மருத்துவமனை தரப்பில் இருந்து குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

அவையங்கள் செயலிழந்த நிலையில் இன்று அதிகாலை குடும்பத்தினரை பார்வையிட அனுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments