உமா மீது பாயும் ஈபிடிபி?


கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாசந்திர பிரகாஸின் யாழ்.விஜயம் ஈபிடிபி வட்டாரங்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

கொறேனா தொற்றுத் தொடர்பான சமூகப் பொறுப்பின்றி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையே தொடர்ச்சியாக போக்குவரத்தில் ஈடுபட்டது மாத்திமன்றி இரண்டு மாவட்டங்களிலும் பொது மக்கள் மத்தியில் நடமாடியதனை ஈபிடிபி கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

உமாசந்திர பிரகாஸினால் போக்குவரத்தின் போது அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாகவும் எந்தவொரு சந்தர்பபத்திலும் பாதுகாப்பு தரபபினர் தன்னை தனிமைபபடுத்துமாறு தெரிவிக்கவில்லை எனவும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சஜித் தரப்பினில் தேர்தல் களமிறங்கும் உமா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே அவர் மீது கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவருகின்றது. 

No comments