கூழ் விருந்து:தேர்தல் ஆணைக்குழுவாவது கூந்தலாவது?
இலங்கை அரசினது உதவிகள் சொல்லிக்கொள்ளத்தக்கதாக யாழ்ப்பாணத்தை வந்தடையாத போதும் மனித நேய அமைப்புக்களது உதவிகள் மட்டுமே அடித்தட்டு மக்களை பட்டினி சாவிலிருந்து உயிருடன் தக்கவைத்துவருகின்றது.
ஆனாலும் மாவட்ட செயலர் முதல் அனைத்து அதிகாரிகளும் உதவும் தரப்புக்களை கட்சி பின்னணி வகையில் வடிகட்டி உதவிகளை தடுத்து வருவது தெரிந்ததே.
அதிலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பாடு மிகவும் திண்டாட்டமாகவுள்ளது.
ஒரு பக்கம் ஊரடங்கு இன்னொரு புறம் பாஸ் கெடுபிடியென அலைக்கழிக்கப்பட யாழ் பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் ஈபிடிபியின் வேலணை கட்சி அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் அதுவும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரம் விருந்தில் கலந்து கொண்டிருக்கின்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.
குறித்த சமுர்த்தி அலுவலரது இருப்பிடம் யாழ் நகரின் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள போதும் மண்டைதீவு சோதனை சாவடி தாண்டி வேலணை கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருடன் கூழ் அருந்தி மகிழும் காட்சிகள் அம்பலமாகியுள்ளன.
ஈபிடிபி கட்சியின் வேட்பாளரான காந்தன் சகிதமே கூழ் விருந்து நடந்துள்ளது.
கூடவே கொலை குற்றச்சாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் மீள இணைக்கப்பட்ட பிரமுகர் கமலும் கூட இணைந்திருந்தார்.
யாழ்.பிரதேச செயலர் சுதர்சன் தன்னை நிமிடத்துக்கொரு தடவை முன்னுதாரணமாக காண்பித்து கொரோனா போராட்டத்தில் இணைந்திருக்க அவரது பணியாளரோ கட்சி அலுவலகத்தில் கூழ் விருந்தில் கலந்து கொண்டமைக்கு என்ன செய்யப்போகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Post a Comment